மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பல லட்சங்களை நன்கொடையாக கொடுத்த நடிகர் விக்ரம்! எத்தனை லட்சங்கள் தெரியுமா?
கஜா புயல் பாதிப்பால் பொலிவிழந்து கிடக்கிறது தென் தமிழகம். வரலாறு காணாத அளவிற்கு வீசிய காற்றால் பல வருடங்களாக வளர்த்த மரங்கள், குடியிருந்த வீடுகள் என அனைதையும் இழந்து தவிக்கின்றனர் மக்கள். கஜாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண நிதிகள் செல்கின்றன. இந்நிலையில் நடிகர் சூர்யா குடும்பம் ஐம்பது லட்சமும், விஜய் சேதுபதி இருபத்தி ஐந்து லட்சமும் நிதி உதவி செய்துள்ளனர்.
மேலும் நடிகர் விஜய் கஜாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாப்பது லட்சம் நன்கொடை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் லைக்கா நிறுவனம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 கோடியே 1 லட்ச ரூபாய் நிவாரண நிதி அளித்தது.
இந்நிலையில் நடிகர் விக்ரம் தனது பங்கிற்கு புயலால் பாதிக்கப்பட்டு வாடும் மக்களுக்கு தனது பங்காக 25 லட்ச ரூபாயை இன்று அளிக்கவுள்ளதாக செய்திகள் வளம் வந்துள்ளது. இதற்காக அவர் இன்று இனைய பரிவர்த்தனை மூலம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்ப உள்ளாராம்.