தமிழ் நடிகரில், தனி மனிதனாக நிவாரண நிதியை அள்ளிக்கொடுத்த நடிகர் விக்ரம்!.



actor-vikram-give-a-relief-fund-to-kerala-people

 கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு,  வரலாறு காணாத மழையால் கடவுளின் தேசம் என்ற அழைக்கப்படும் கேரளா முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Actor vikram

குறிப்பாக எர்ணாகுளம், ஆலப்புழா, வயநாடு, கோழிக்கோடு, பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.   

Actor vikram

கேரளாவில்,மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஒட்டு மொத்த மாநிலமும் முடங்கிப்போயுள்ளது.  தொடர்வண்டி போக்குவரத்து, மெட்ரோ ரயில், விமான போக்குவரத்து, பேருந்து சேவை, வாகனங்கள் செல்லும் வழித்தடம் என அனைத்தும் முற்றிலும் முடங்கியது.  

Actor vikram

கனமழையால் சாலைகள் அனைத்தும் சேதமடைந்தது. பல்வேறு சாலைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 357-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3.3 லட்சம் மக்கள், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  பலர் காணாமல் போய்விட்டனர்.  மீட்பு படையினர் இவர்களை தேடி வருகின்றனர். 

Actor vikram 
இதனிடையே,  கடும் கனமழையால் கேரளா தொடர்ந்து தத்தளித்து வருவதால், கேரளாவுக்கு உதவுமாறு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டார்.  

இதையடுத்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களும், திரை பிரபலங்களும் போட்டி போட்டுக் கொண்டு கேரளாவுக்கு நிவாரண பொருட்களும்,  நிதி உதவியும் அளித்து வருகின்றன. 

இந்நிலையில், கேரளா வெள்ள பாதிப்புக்கு நடிகர் விக்ரம் அதிகபட்சமாக ரூ 35 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.