மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மகளுக்கு குட்டி தேவதை பிறந்துள்ளது..! 54 வயதில் தாத்தா ஆனார் நடிகர் விக்ரம்!
நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கு பெண் குழந்தை பிறந்ததை அடுத்து நடிகர் விக்ரமுக்கு தாத்தாவாக ப்ரோமோஷன் கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விக்ரம். இவரது மகள் அக்ஷிதா என்பவருக்கும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து மகள் வழி பேரனான மனுரஞ்சித் என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இவர்களின் திருமணம் கருணாநிதி அவர்க்ளின் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகியுள்ளநிலையில் அக்ஷிதா சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதாகவும், கொரோனா காலம் என்பதால் அவரது குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்ற சிறிய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றதாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் விக்ரம் மகள் அக்ஷிதாவுக்கு நேற்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. மகளுக்கு குழந்தை பிறந்ததை அடுத்து நடிகர் விக்ரமுக்கு தாத்தாவாக ப்ரோமோஷன் கிடைத்துள்ளது.