மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தளபதி63 படத்தில் இணையவுள்ள பிரபல காமெடியன்? மீண்டும் ஒன்றுசேரும் ஹிட் கூட்டணி!
மூன்றாவது முறையாக இணைகிறது அட்லீ - விஜய் கூட்டணி. தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து மீண்டும் தளபதி 63 இல் இணைகிறார்கள். முந்தைய இரண்டு படங்களும் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தளபதி-63 படத்தை AGS நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. சர்க்கார் படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தளபதி-63 ஷூட்டிங் விரைவில் ஆரம்பமாக உள்ளது. படத்தின் நாயகி யார் என்பது இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. சமந்தா, நயன்தாரா இருவரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க காமெடியன் விவேக்குடன் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. அவர் ஏற்கனவே விஜய்யுடன் குஷி, பத்ரி, யூத் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இந்த காம்போ குருவி படத்தில் தான் நடித்தது.
தற்போது விஜய்63ல் அவர் நடிக்க ஒப்புக்கொண்டால், ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.