"ரஜினிக்கு பின் விஜய் தான்" நடிகரும், பாடகருமான யுகேந்திரன் மனம்திறந்து புகழாரம்..! முழு விபரம் உள்ளே.!!



Actor Yugendran about Thalapathy Vijay 

 

வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் எண்டர்டயின்மெண்ட் தயாரிப்பில், நடிகர்கள் விஜய், மீனாக்ஷி சௌதாரி, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், லைலா, வைஷ்ணவ், ஸ்னேகா, பிரேம்ஜி, யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ், யோகிபாபு, கஞ்சா கருப்பு உட்பட பலர் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் கோட் தி க்ரேடஸ்ட் ஆப் ஆள் டைம் (The Greatest of All Time GOAT).

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், படத்தில் நடிகர் மற்றும் பிரபல பின்னணி பாடகரான யுகேந்திரன் சார்ந்த காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது. அச்சமயம் அவர் விஜயை நேரில் சந்தித்தார். அந்த நிகழ்வுகளை யுகேந்திரன் பகிர்ந்துள்ளார். 

கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் விஜயை சந்தித்த தருணத்தை அவர் விடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில், "கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக நான் அவரை சந்தித்தேன். அவருடன் நடிக்கும் வாய்ப்பு இப்போது கிடைத்தது. நான் அவரை 15 ஆண்டுகள் சந்தித்தபோது, என்னை அவர் நினைவுகொள்வரா? பேசுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. 

ஒருவழியாக படப்பிடிப்பு தளத்தில் அவரை சந்திக்கும் தருணம் வந்தபோது நான் எதிர்பார்க்கவேயில்லை. அவர் என்னை நேரில் வந்து கட்டியணைத்து, பார்த்து எவ்வுளவு நாட்கள் ஆகிவிட்டன. உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி என கூறியபோது எனக்கு வார்த்தைகளே வரவில்லை. அந்த நடிகர் இளையதளபதி விஜய் தான். எனக்கு அது வியப்பு, ஆச்சரியத்தை தந்தாலும் மகிழ்ச்சி அதிகளவு இருந்தது.

எனது நண்பன் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நான் தற்போது நடித்துள்ளேன். வில்லன் கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். இந்நிகழ்வை என்னால் மறக்க முடியாது. படப்பிடிப்பு தலத்தில் ஒவ்வொரு நாளும் நாங்கள் பழைய விஷயங்களை நினைவுகூர்ந்து மகிழ்ந்தோம். அவர் அனைவருடனும் இயல்பாக பழகுவார். 

எவ்வுளவு பெரிய உச்சத்தில் இருக்கும் நபர், இப்படியம் இருப்பாரா? என ரஜினி சாரை பரந்து வியந்தேன். இன்று விஜயை பார்த்து பூரித்துபோனேன். அவரின் அடுத்தடுத்த முயற்சிகள் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள். எந்த பிரச்சனை நடந்தாலும், அது யாரையும் பாதிக்கக்கூடாது. அந்த பாதிப்பு வராமல் முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக அவர் இருக்கிறார். திருப்பாச்சி படத்திற்கு பின்னர் 18 ஆண்டுகள் கழித்து நான் நடித்துள்ளேன்" என தெரிவித்தார்.