மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அப்படியிருந்தாதான் ஹீரோயின் வாய்ப்பு வருமா என்ன?? பல கேலிகளை சந்தித்த சூரரைப்போற்று நாயகி வருத்தம்!!
மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அபர்ணா பாலமுரளி. இவர் தமிழில் 8 தோட்டாக்கள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் சர்வம் தாளமயம், தீதும் நன்றும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மேலும் அபர்ணா பாலமுரளி சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே பெருமளவில் பிரபலமானார். இப்படத்திற்காக அவர் தேசிய விருதும் பெற்றுள்ளார். தற்போது அவர் 'நித்தம் ஒரு வானம்' படத்தில் நடிகர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
நடிகை அபர்ணா உடல் பருமனாக இருப்பதாக உருவக்கேலிகளை சந்தித்துள்ளார். இதுகுறித்து அவர் பேட்டி ஒன்றில், உடல் தோற்றத்துக்கும், திறமைக்கும் சம்மந்தமில்லை. நான் உடல் பருமனாக இருக்கிறேன் என பலரும் கிண்டல் செய்வதை கேட்டு மிகவும் வருத்தப்பட்டிருக்கிறேன். ஆனால் தற்போது அவ்வாறு பேசுவதை கண்டு கொள்வதில்லை.
ஆரோக்கிய பிரச்சினை மற்றும் வேறு பல காரணங்களால் உடல் எடையில் மாற்றங்கள் ஏற்படலாம். நான் எப்படி இருக்கிறேனோ அவ்வாறே பலரும் ஏற்றுக்கொண்டு வாய்ப்பளித்துள்ளனர். ஒல்லியாக இருந்தால்தான் கதாநாயகி வாய்ப்பு வரும் என்பதையெல்லாம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என கூறியுள்ளார்.