நடிகை அபிநயாவுடன் விஷாலுக்கு காதலா?? விரைவில் திருமணமா?? அவரே உடைத்த உண்மை!!



Actress abinaya revealed truth about love with vishal

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் தற்போது லத்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதனை தொடர்ந்து அவர் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

45 வயது நிறைந்த நடிகர் விஷால் நடிகை வரலட்சுமியை காதலித்து, இருவரும் பிரிந்து விட்டதாக தகவல்கள் பரவியது. அதனைத் தொடர்ந்து அவருக்கு அனிஷா ரெட்டி என்பவருடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு சில காரணங்களால் திருமணம் நிச்சயதார்த்தத்துடன் நின்றது. 

இந்த நிலையில் நடிகர் விஷால் 
நாடோடிகள், பூஜை, குற்றம் 23, ஈசன் போன்ற  படங்களில் நடித்துள்ள, வாய் பேச முடியாத காது கேளாத 30 வயது நிறைந்த நடிகை அபிநயாவை காதலிப்பதாகவும், இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும், விரைவில் திருமணம் எனவும் தகவல்கள் பரவியது.

இது குறித்து நடிகை அபிநயா, மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நான் விஷாலின் மனைவியாக நடித்து வருகிறேன். அதுகுறித்த போட்டோசூட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலான நிலையில் தாங்கள் காதலிப்பதாகவும், நிஜத்தில்  திருமணமாகிவிட்டது என்பது போன்றும் வதந்திகளை கிளப்பி வருகின்றனர். அது முழுவதும் பொய்யானது என தெரிவித்துள்ளார்.