மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. சூப்பர் நீங்க.! அன்னையர் தினத்தில் நெகிழ்ச்சியுடன் நடிகை அபிராமி பகிர்ந்த வேற லெவல் நியூஸ்.! குவியும் பாராட்டுகள்!!
தமிழ் சினிமாவில் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த வானவில் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அபிராமி. இவர் முதல் படத்திலேயே ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் நடிகை அபிராமி பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கமல்ஹாசனுடன் இணைந்து அவர் நடித்த விருமாண்டி திரைப்படம் செம ஹிட்டானது. நடிகை அபிராமி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் பிரபல மலையாள எழுத்தாளரான பாவனனின் பேரன் ராகுலை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அதனைத் தொடர்ந்து சினிமாவிலிருந்து விலகி இருந்த நடிகை அபிராமி தற்போது மீண்டும் படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று அன்னையர் தினத்தன்று நடிகை அபிராமி மகிழ்ச்சியான செய்தி ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதாவது அவர், தானும் தனது கணவர் ராகுலும் கடந்த ஆண்டு கல்கி என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து தற்போது பெற்றோர்களாகிவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அதனால் தங்களது வாழ்க்கை மிகவும் அழகாக மாறிவிட்டது. புதிய அம்மாவாக அன்னையர் தினத்தை கொண்டாடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த பதிவு வைரலான நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.