திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
புகைப்படத்தில் இருப்பவர் வளர்ந்துவரும் பிரபல இளம் நடிகை! யார் என்று தெரிகிறதா? அட அவரா இது?
இந்த புகைப்படத்தில் குழந்தையாக இருப்பவர் தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட வளர்ந்துவரும் பிரபல நடிகைகளில் ஒருவர். கோயம்பத்தூரை பூர்விகமாக கொண்ட இவர் யூடியூப் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். எண்ணற்ற குறும்படங்களில் நடித்துள்ள இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
யூடியூப் மூலம் கிடைத்த புகழை அடுத்து வெள்ளித்திரை பக்கம் தலைகாட்ட தொடங்கிய இவர் காதல் கண்கட்டுதே என்றே திரைப்படம் மூலம் ஹீரோயின் அவதாரம் எடுத்தார். அதன்பின்னர் கிடைத்த வாய்ப்புகளை தவறவிடாமல் ஒருசில படங்களில் நடித்துவந்த இவர் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்த ஏமாளி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார்.
அதன்பின்னர் நாகேஷ் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு என ஒருசில படங்களில் நடித்துள்ள இவர் அடுத்ததாக சசிகுமார் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்துவருகிறார்.
இவர் யார் என்று தெரிகிறதா? வேறு யாரும் இல்லை. நடிகை அதுல்யா ரவிதான் இந்த புகைப்படத்தில் குழந்தையாக இருப்பது.