#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இதுமாதிரியான கேவலமான வேலையை செய்யாதீங்க... அதிர்ச்சியில் அம்மு அபிராமி.! ரசிகர்களுக்காக வெளியிட்ட வீடியோ!!
தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த பைரவா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் என்ட்ரி கொடுத்தவர் அம்மு அபிராமி. அதனைத் தொடர்ந்து அவர் தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசன், அசுரன் மற்றும் அண்மையில் வெளிவந்த யானை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் அம்மு அபிராமி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார்.
இதற்கிடையில் அவர் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் தனது சம்பந்தப்பட்ட வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் மர்ம நபர் ஒருவர் அபிராமியின் லோகோவை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் பண மோசடியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அது அபிராமியின் சேனல் என பாலோ செய்த ரசிகர் ஒருவரிடம் அந்த நபர் உங்களுக்கு ஐபோன் பரிசு விழுந்துள்ளது. அதனை அனுப்பி வைப்பதற்கு டெலிவரி கட்டணம் ஐயாயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். இதனை நம்பி அந்த நபரும் பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால் ஐ போன் வராத நிலையில் அந்த ரசிகர் இதுகுறித்து அம்மி அபிராமியிடம் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த அவர் தனது ரசிகர்கள் மீண்டும் ஏமாறக்கூடாது என்பதற்காக அவர்களை உஷார்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், என் பெயரில் நடந்த பணமோசடி குறித்து அறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். இதுபோன்ற மற்றவர்கள் காசை கொள்ளையடிக்கும் கேவலமான செயலை செய்யாதீர்கள். நான் எப்பொழுதும் பரிசுப் பொருட்கள் வழங்குவதாக அறிவிப்பதில்லை. இதுபோன்று யாரும் ஏமாறாதீர்கள். எச்சரிக்கையாக இருங்கள் என கூறியுள்ளார்.