மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகை ஆண்ட்ரியாவை பிச்சை எடுக்கவைத்த நடிகர் விஷால்!. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!
சன் டிவியில், நடிகர் விஷால் நாம் ஒருவர் என்ற நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குகின்றார். அந்த நிகழ்ச்சியில், தமிழகத்தில் மிகவும் பாதிக்கப்பட்டு வறுமையில் தவிப்பவர்களை அழைத்து வந்து நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.
இதற்கு முன்னர் நடிகர் கார்த்திக், நடிகை கீர்த்தி சுரேஷ், காமெடி நடிகர் சூரி, நடிகை ஆண்ட்ரியா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.
சென்ற வாரம் நடந்த நிகழ்ச்சியில், காமெடி நடிகர் பரோட்டா சூரி அவரது சொந்த உணவகத்திற்கு சென்று பணிபுரிபவராக வேலை செய்து, அதில் வந்த தொகையை அனிதா என்னும் சிறுமிக்கு கொடுத்து உதவினார். அந்த நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றது.
இந்த நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை ஆண்ட்ரியா கண் தெரியாத சிறுவனுக்காக பிச்சை எடுத்தார். அந்த நிகழ்ச்சி பார்வையாளார் மற்றும் அங்கு வந்து பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய், அனைவரும் கண்ணீர் விட்டு அழுதனர்.
அந்த நிகழ்ச்சியில், ஆண்ட்ரியா செய்த செயலுக்காக நடிகர் விஷால் நன்றியினை தெரிவித்துக் கொண்டார். சன்டிவி இதுவரை அதிகமாக சீரியலில் கவனம் செலுத்தி வந்த நிலையில், இந்த நிகழ்ச்சி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் மக்களுக்கு பயனுள்ள இதுபோன்ற நிகழ்ச்சிகளை வரவேற்கின்றோம் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.