#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
போதையில் காதலனோடு காரை கண்டபடி ஓட்டிய நடிகை.. கைகாப்பு போட்டு ஆப்படித்த அதிகாரிகள்.. கண்ணீர் விடும் ரசிகர்கள்..!
போதையில் தனது காதலனுடன் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நடிகை அஸ்வதியை வாகன ஓட்டிகள் மடக்கிப்பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மோலிவுட் சினிமா மற்றும் சீரியல் தொடர்களில் நடித்து பிரபலமடைந்தவர் அஸ்வதி பாபு. இவர் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களால் அறியப்பட்டார். இந்த நிலையில் இவர் தனது காதலன் நவுபல் என்பவருடன் போதையில் காரை அதிவேகமாக ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது.
கொச்சி குசாட் சந்திப்பு சாலையில் தறிக்கட்டு சென்ற நடிகையின் கார், இருசக்கர வாகனம் மற்றும் சாலையோரம் தடுப்புகளில் உரசியபடி அதிவேகத்தில் சென்றுள்ளது. இதனால் அந்த காரை விரட்டி சென்ற வாகன ஓட்டிகள் காரை முந்தி சென்று இடைமறித்துள்ளனர்.
இதனைக் கண்டு தப்பிப்பதற்காக காரை சாலையை விட்டு இறக்கியபோது கல் குத்தியதில், முன் பக்க டயர் வெடித்து செல்ல முடியாமல் அஸ்வதியின் கார் அங்கேயே மடக்கப்பட்டது. பின் காருக்குள் இருந்து இறங்கிய நடிகை அஸ்வதி மற்றும் காதலன் நவுபல் தங்களை விரட்டி வந்து வீடியோ எடுத்தவர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.
இதற்கிடையில் காவல்துறையினர் வருவதற்குள் தப்பித்து செல்வதற்காக இருவரும் வேகமாக நடக்க ஆரம்பித்தனர். ஆனால் அதற்குள்ளாகவே திருக்காக்கரை காவல்துறையினர் அங்குள்ள ஒரு கடையில் வாடிக்கையாளர் போல பதுங்கி இருந்து இருவரையும் மடக்கிப்பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
பின் மது அருந்தியது தொடர்பாக இருவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு கார் ஓட்டிய நடிகை அஸ்வதி மற்றும் அவரது காதலன் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த நிலையில் நடிகை அஸ்வதி காவல்துறையில் சிக்குவது இது இரண்டாவது முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், பெண்களை போதைக்கு அடிமையாக்கி பாலியல் தொழில் செய்ததாக காவல்துறையினறால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.