மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காணும் காட்சியை அழகாக காணுங்கள் என்று கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்த தர்ஷா குப்தா..
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் தர்ஷா குப்தா. இவர் ஆரம்ப கட்டத்தில் சின்ன திரையில் இருந்து சீரியலில் நடித்து தனது நடிப்பு திறமையின் மூலம் வெள்ளி திரைக்கு காலடியெடுத்து வைத்தார். முதன் முதலில் சின்னத்திரையில் ஜீ தமிழில் 'முள்ளும் மலரும்' எனும் சீரியலில் நடித்து வந்தார்.
இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானபின் மின்னலே, செந்தூரப்பூவே போன்ற சீரியல்களிலிம் நடித்து வந்தார். இதன் பின் விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்தார் தர்ஷா குப்தா.
இது போன்ற நிலையில், வெள்ளி திரையில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் தர்ஷா குப்தா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலமே பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.
படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்பதால் பட வாய்ப்புகள் குறைய தொடங்கின.
இதனால் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் போட்டோ சூட் செய்து கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வரும் தர்ஷா குப்தா, "தற்போது அழகான காட்சிகளை தேடாதீர்கள் காட்சியை அழகாக்குங்கள் என்று கேப்ஷனுடன் தனது கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார்.