மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
'நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' பட நடிகையா இது? புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
2012ம் ஆண்டு "18 வயசு" என்ற படத்தில் அறிமுகமானவர் காயத்ரி ஷங்கர். தொடர்ந்து அதே ஆண்டு வெளியான "நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்" படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். இதையடுத்து மலையாளத்திலும் நடித்து வருகிறார் காயத்ரி ஷங்கர்.
மேலும் தமிழில் புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், ரம்மி, சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், துக்ளக் தர்பார் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இது மட்டுமல்லாமல் சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியான "விக்ரம்" படத்திலும் ஒரு முக்கியமான கேரக்டரில் காயத்ரி ஷங்கர் நடித்திருந்தார்.
இந்நிலையில், இன்ஸ்டாக்ராமில் ஆக்டிவாக இருக்கும் காயத்ரி, சமீபத்தில் ஹாலிவுட் நடிகை ரிஹான்னா போல் போட்டோஷூட் நடத்தி, அந்தப் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். ஆயிரக்கணக்கான பாலோயர்களைக் கொண்டுள்ள அவரது புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ்கள் கிடைத்து வருகின்றன.
இந்நிலையில் தற்போது "Mad Max: Fury Road" என்ற ஹாலிவுட் படத்தில் வரும் கதாப்பாத்திரம் போல அச்சு அசலாக, பாதி மொட்டையுடன் இருப்பது போல் AI மூலம் உருவாக்கப்பட்டுள்ள அந்தப் புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தற்போது இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.