பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அட.. சூப்பர்! சுந்தரி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல முன்னணி நடிகை.! இப்பவும் எப்படியிருக்காரு பார்த்தீங்களா!! வைரல் வீடியோ.!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருக்கும். அவ்வாறு சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் சுந்தரி. நிறக்குறைவால் கணவனால் அவமானப்படுத்தப்பட்ட கிராமத்து பெண் சுந்தரி தனது விடாமுயற்சியால் கலெக்டராக வேண்டும் என்ற கனவோடு படித்து வருகிறார்.
இதற்கிடையில் அவர் தனது குடும்பத்தினரால், சமூகத்தினரால் பல சிக்கல்களை சந்தித்து தனது புத்திசாலித்தனத்தால் மீண்டு வருவதை மையமாகக் கொண்டு இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த ஆண்டு துவங்கிய இந்த சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது ரசிகர்கள் மத்தியில் மேலும் விறுவிறுப்பை கூட்டும் வகையில் சுந்தரி சீரியலில் பிரபல முன்னணி நடிகை ஒருவர் என்ட்ரி கொடுக்க உள்ளார்.
அதாவது 80,90ஸ் காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா என பல நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த கௌசல்யா சுந்தரி தொடலில் முக்கிய கெஸ்ட்டாக களமிறங்க உள்ளாராம். இது குறித்த வீடியோ வைரலான நிலையில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் கௌசல்யா இந்த வயதிலும் இளமையாக அப்படியே இருக்காரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.