திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஆண்டி.. கிண்டல் செய்தவருக்கு, சும்மா நச்சுனு எதிர்நீச்சல் நடிகை ஹரிப்ரியா கொடுத்த பதிலடி!!
சின்னத்திரை தொடர்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் ஏராளம். அவ்வாறு மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர் நடிகை ஹரிப்ரியா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான லட்சுமி வந்தாச்சு, சன் டிவியில் ஒளிபரப்பாகி ஹிட்டான பிரியமானவள் போன்ற தொடரில் நடித்துள்ளார்.
பிரியமானவள் தொடரில் இவர் நடித்த இசை என்ற கதாபாத்திரம் மக்களிடையே பெருமளவில் பிரபலமானது. அதனைத் தொடர்ந்து பலரும் அவரை இசை என்றே கூறி வந்தனர்.ஹரிப்ரியா கடந்த 2012 ஆம் ஆண்டு சீரியல் நடிகர் விக்னேஷ்-ஐ காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து ஹரிப்ரியா சன் டிவியில் எதிர்நீச்சல் தொடரில் அப்பாவி மனைவியாக நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நந்தினி தன்னை ஆன்ட்டி, குண்டு என கிண்டல் செய்வோருக்கு பதிலடி கொடுத்து, ஆண்டியா இருந்தா என்ன? வயசாவது இயற்கை. அதை எப்படி தப்பு சொல்ல முடியும். எனக்கு காலில் அடிபட்டு இருக்கு. அதனால் உடற்பயிற்சி செய்ய முடியாது என கூறியிருந்தார்.
இதையடுத்து லைவில் வந்த ரசிகர் ஒருவர் அவரை ஆன்ட்டி என அழைத்துள்ளார். அதற்கு நடிகை ஹரிப்ரியா அந்த நபரிடமே, இளமையாக இருக்க டிப்ஸ் கொடுங்கள் என கூறியுள்ளார்.