மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கடற்கரையில் ஒரே ஜாலி! வைரலாகும் நடிகை கஜால் அகர்வாலின் ஹனிமூன் கொண்டாட்ட போட்டோஸ்
திருமணம் முடிந்து தனது கணவருடன் ஹனிமூன் கொண்டாட மாலத்தீவு சென்றுள்ளார் நடிகை காஜல் அகர்வால்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இந்திய அளவில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளன்னர். குறிப்பாக தமிழ் சினிமாவில் இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளன்னர். தற்போது இவர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.
இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் கடந்த அக்டோபர் 30-ம் தேதி கவுதம் கிச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. கொரோனா காலம் என்பதால் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு தற்போது தனது கணவருடன் சேர்ந்து ஹனிமூன் கொண்டாட மாலத்தீவு சென்றுள்ளார் காஜல் அகர்வால். அங்கு தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.