மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதன் முறையாக தனது மகனின் புகைப்படத்தை பகிர்ந்த நடிகை காஜல் அகர்வால்... குவியும் லைக்ஸ்கள்!!
தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
காஜல் அகர்வால் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை காஜல் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி கெளதம் கிட்சிலு என்பவரை மிகவும் எளிமையாக திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிப்பதை தொடர்ந்து வந்த காஜல் அகர்வால் பின் கர்ப்பமானதை அடுத்து படங்களில் நடிப்பதை தவிர்த்துள்ளார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு மகனை பெற்றோடுத்த நிலையில் மகனுக்கு நீல் கிச்லு என பெயர் வைத்தனர்.
இந்நிலையில் தற்போது காஜல் தனது மகன் முகம் தெரியும் வகையில் போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது வைரல் ஆகி வருகிறது.