தங்கத்தை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை குறைய போகிறதா.?! பொதுமக்கள் மகிழ்ச்சி.?!



may petrol diesel price reduce in future

தற்போது வரலாறு காணாத அளவிற்கு கச்சா எண்ணெயின் விலையானது வீழ்ச்சி அடைந்து இருக்கிறது. 

கடந்த 2008க்கு பிறகு தற்போது உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஆனது மிகக் கடுமையாக சரிந்து ஒரு பீப்பாய் வெறும் 59 டாலருக்கு தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

petrol diesel price

கச்சா எண்ணையின் விலை அதிகரிக்க செய்யும் பொழுதெல்லாம் உள்நாட்டில் டீசல் மற்றும் பெட்ரோலின் விலை எண்ணெய் நிறுவனங்களால் உயர்த்தப்படுகின்றது. அதுபோல தற்போது கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்து இருக்கும் நிலையில், அதற்கான பயன்களை பொதுமக்களும் பெற வேண்டும். 

எனவே பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய்நிறுவனங்கள் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஏற்கனவே, தங்கம் விலை படிப்படியாக குறைந்து கொண்டு வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலையும் விரைவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.