"கோழைகளே... கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.." ஜிபியு விமர்சனம்.!! நடிகை திரிஷா பதிலடி.!!
நாளை.. பங்குனி செவ்வாய்.. இந்த நேரத்தில் விளக்கேற்றினால்.. நற்செய்திகள் தேடிவரும்.!

பங்குனி மாதத்தின் இறுதி செவ்வாயான நாளை ராகு கால கட்டத்தில் விளக்கேற்றி வழிபட்டால் பல்வேறு நன்மைகளை பெறலாம். தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் மிகவும் பிரசித்தி பெற்ற மாதமாக இருப்பது பங்குனி. இந்த மாதத்தில் பங்குனி உத்திர திருவிழா மிகவும் விசேஷமானது.
முருகன் கோவில்களில் காவடி எடுத்து அபிஷேகங்கள் செய்து வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இப்படிப்பட்ட சிறப்புகள் கொண்ட இந்த மாதத்தில் அனைத்து நாட்களும் அனுகிரகம் கொண்டவைதான். நாளை இந்த பங்குனி மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை வருகிறது.
அந்த நாளில் விரதம் இருந்து ராகு கால நேரத்தில் வீட்டில் பூஜைகளை மேற்கொண்டு வழிபட்டால், பல்வேறு நற் பலன்களை அனுபவிக்கலாம். விரதத்தை அதிகாலையில் துவங்கி ராகு கால நேரத்தில் பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும். பின்னர், இறைவனை நினைத்து வழிபட்டால் மங்கள காரியங்கள் அனைத்தும் நடக்கும்.
தீய சக்திகள் நம்மிடம் இருந்து விலகி கடன் தொல்லைகள் உள்ளிட்டவை நீங்கி நல்ல பண வரவு ஏற்படும். மேலும், சொந்த வீடு எப்போது கட்டலாம் என்று காத்திருக்கும் நபர்களுக்கு, வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு, திருமணத்திற்காக காத்திருக்கும் நபர்களுக்கு சுப செய்திகள் வரும்.