மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சோ.. பிரபல சீரியல் நடிகையின் மகனுக்கு இப்படியொரு நோய்.. கண்ணீரை வரவழைக்கும் துயர தகவல்.!
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உட்பட பல மொழிகளில் நடித்த நடிகை கனிகா. இவர் மிஸ் சென்னை அழகியாக தேர்வு செய்யப்பட்ட பின்னர் திரைத்துறைக்கு பரிட்சமயமானார். கடந்த 2002 ல் 5 ஸ்டார் படம் மூலமாக அறிமுகமான கனிகா, பின்னணி குரலும் கொடுத்து வந்தார்.
சச்சின் படத்தில் ஜெனிலியாவுக்கு குரல் கொடுத்துள்ளார். அதனைத்தொடர்ந்து சீரியலில் நடிக்க களமிறங்கிய நடிகை, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
கடந்த 2008 ல் ஷியாம் என்பவரை திருமணம் செய்த கனிகாவுக்கு ரிஷி என்ற மகனும் இருக்கிறார். மகன் குறித்து அவர் தெரிவிக்கையில், "எனது மகன் பிறந்ததும் என்னிடம் அவனை காண்பிக்கவில்லை. குழந்தைக்கு இருதய பிரச்சனை இருப்பதால், இரவு வரை உயிர்தாங்குவது கடினம் என்று கூறினார்கள்.
என் அன்பு மகனை பிறந்ததும் ICU-வில் பார்த்தது மனதை உடைத்து. 7 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பின் மகனை பிழைக்க வைத்தனர். எனது வாழ்க்கையில் என் மகனை இன்று வரை பத்திரமாக கவனித்து வருகிறேன்" என்று கூறியுள்ளார்.