மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாகுபலி புகழ் பிரபாஸுடன் நடிகை கீர்த்தி திருமணம்?.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை.. உண்மை தகவல் இதுதான்..!
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபாஸ். இவர் இயக்குனர் ராஜமௌலியுடன் கைகோர்த்து பாகுபலி திரைப்படத்தில் நடித்ததை தொடர்ந்து இந்திய அளவில் மிகப்பெரிய நாயகனாக அடையாளப்படுத்தப்பட்டார்.
இவரும், நடிகை அனுஷ்காவும் காதலித்து வருவதாக முன்னதாக பல வதந்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இருவரும் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், நடிகர் பிரபாஸும் - நடிகை கீர்த்தி சனோனும் இணைந்து ஆதிபுரூஸ் திரைப்படத்தில் நடித்துள்ளனர். இவர்கள் காதல் வயப்பட்டதாகவும், டேட்டிங் செல்ல முடிவெடுத்திருப்பதாகவும் பல வதந்திகள் வெளியாகி இருந்தன.
இதற்கு விளக்கமளிக்கும் வகையில் பதில் தெரிவித்த நடிகை கீர்த்தி சனோன், "எங்களின் திருமண தேதியை செய்தி நிறுவனங்கள் கூறுவதற்கு முன்பு நானே கூறிவிடுகிறேன். அந்த தேதி என்னவென்றால் இது உண்மையல்லாத செய்தி என்பது தான். நாங்கள் காதல் வயப்படவில்லை. டேட்டிங் செல்ல முடிவெடுக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.