மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முன்னணி ஸ்டார் ஹீரோவின் மகன் லவ் டார்ச்சர் கொடுக்கிறாரா?? உண்மையை போட்டுடைத்த நடிகை க்ரீத்தி ஷெட்டி!!
தெலுங்கில் வெளிவந்த உப்பெனா என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை க்ரீத்தி ஷெட்டி. அப்படத்தில் அவர் விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் நடிகை க்ரீத்தி ஷெட்டி தி வாரியார், கஸ்டடி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் அவர் பல கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் ஜீனி திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையில் முன்னணி கதாநாயகன் ஒருவரது மகன் தனக்கு தொடர்ந்து லவ் டார்ச்சர் கொடுத்து வருவதாகவும், அவர் போகும் இடங்களுக்கு எல்லாம் தன்னையும் வரக் கூறி தொல்லை செய்வதாகவும் க்ரீத்தி ஷெட்டி கூறியதாக செய்தி வெளியானது.
இது பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் க்ரீத்தி ஷெட்டி, முதலில் இதுபோன்ற உண்மையில்லாத செய்திகளை பகிர்வதை நிறுத்துங்கள். இதற்கு விளக்கமளிப்பதை தவிர்க்க வேண்டும் எனதான் நான் நினைத்தேன். ஆனால், இது எல்லையை மீறி மிக வேகமாக பரவி கொண்டிருப்பதால் இதுகுறித்து பதிலளிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என காட்டமாக தெரிவித்துள்ளார்.