மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரொம்ப சாதாரணமாக படுக்கைக்கு அழைப்பார்கள்.! நடிகை கிரணுக்கு நேர்ந்த சோகம்.!
2001ம் ஆண்டு "ஜெமினி" திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கிரண் ரத்தோட். தொடர்ந்து தமிழில் வில்லன், திவான், அன்பே சிவம், பரசு ராம், அரசு, வெற்றி, தென்னவன் உள்ளிட்ட பல படஙக்ளில் நடித்துள்ளார்.
மேலும் தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ள கிரண், சமீபகாலமாக சரியாக பட வாய்ப்பு அமையாததால் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியளித்திருந்தார் கிரண்.
அதில் அவர் கூறியதாவது, " இங்கு தமிழ், தெலுங்கு மொழி படங்களில் பிசியாக இருந்தபோது ஹிந்திக்கு சென்றேன். ஆனால் அங்கு எனக்கு சரியான வரவேற்பு இல்லாததால், மீண்டும் சென்னைக்கே வந்துவிட்டேன். சினிமாவில் நடித்த போது எனக்கு நிறைய கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டன.
மிகவும் சர்வ சாதாரணமாக படுக்கைக்கு அழைப்பார்கள். இதனால் எனக்கு மனஅழுத்தம் ஏற்பட்டது. இதனால் நடிப்பை விட்டு விலகி ஏதாவது தொழில் செய்யலாமா என்று இருந்தேன். இப்போது மீண்டும் பட வாய்ப்புகள் வருகின்றன" என்று கிரண் ரத்தோட் கூறியுள்ளார்.