ரசிகர்கள் விரும்பினால் மீண்டும் நடிக்கத் தயார்! 90களில் கலக்கிய முன்னணி நடிகையின் அதிரடி ஆசை



actress kushboo wants to act again

1990களில் தமிழ் சினிமா மற்றும் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்திருந்தவர் நடிகை குஷ்பு. இவர் தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். 1980களில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இவர் 1989ஆம் ஆண்டு வருஷம் பதினாறு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

1988ம் ஆண்டு தர்மத்தின் தலைவன் படம் துவங்கி 2000 ஆம் ஆண்டு வரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை குஷ்பூ. இவருக்கு ரசிகர்கள் கோவில் கட்ட முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது.

kushboo

அதன் பின்னர் 2013ஆம் ஆண்டு வரை சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் தோன்றினார் நடிகை குஷ்பு. அதன் பின்னர் அரசியலில் தீவிரம் காட்டத் தொடங்கிய அவர் ஆரம்பத்தில் திராவிட முன்னேற்ற கழகத்திலும் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அந்த கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் மக்கள் மனதில் மறைந்து விடாமல் இருக்க மீண்டும் சினிமாவில் நடிக்கலாமா என்ற எண்ணத்தில் குஷ்பூ இருந்து வருகிறார். அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர் சினிமாவில் ஒரு சில வித்தியாசமான கதாபாத்திரங்களில் மீண்டும் நடிக்க விரும்புகிறேன். ரசிகர்களாகிய நீங்கள் உங்களது அறிவுரை எனக்கு தேவை என தனது ட்விட்டர் பக்கத்திலில் என கேட்டுள்ளார்.

kushboo

இதற்கு பதில் அளித்துள்ள ஒரு சில ரசிகர்கள் நீங்கள் மீண்டும் சினிமாவிற்கு வருவதை வரவேற்கிறோம் என தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளனர். அதே சமயம் சிலர் குஷ்புவை கிண்டல் செய்யும் விதமாக காங்கிரஸ் கட்சி முற்றிலும் வலுவிழந்து விட்டதால் வேறு வழியில்லாமல் சினிமாவில் நடிக்க வருகிறீர்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.