மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. நடிகை லைலாவிற்கு இவ்வளவு பெரிய மகன்களா!! சும்மா ஹீரோ ரேஞ்சுக்கு இருக்காங்களே!! வைரல் புகைப்படம்.!
தமிழ் சினிமாவில் 1999 ஆம் ஆண்டு கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த கள்ளழகர் என்ற படத்தில் நடித்தது மூலம் அறிமுகமானவர் நடிகை லைலா.அதனை தொடர்ந்து அவர் சூர்யா, பிரபுதேவா,விக்ரம், அஜித் என பல முன்னணி நடிர்களின் படங்களில் நடித்து பிரபலமாக வலம் வந்தார். இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகை லைலாவின் குடும்பம்
கண்ணகுழியழகி, சிரிப்பழகி என ரசிகர்களால் புகழப்பட்ட நடிகை லைலா
2006 ஆம் ஆண்டு ஈரான் தொழிலதிபரான மெஹதீன் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். பின் குடும்பம், குழந்தைகள் என செட்டிலானார். அதனைத் தொடர்ந்து 16 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து நடிகை லைலா படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் திடீரென ரம்பாவைத் தாக்கிய பிரபல நடிகை.. என்ன நடந்தது.?
மகன்களுடன் லைலா
அவர் தற்போது விஜய்யின் GOAT, ஆதி நடிப்பில் உருவாகி வரும் சப்தம் உள்ளிட்ட படங்களில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அன்னையர் தினத்தன்று அவர் தனது மகன்களுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் நடிகை லைலாவிற்கு இவ்வளவு பெரிய மகன்களா?? நம்பவே முடியவில்லை என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சூர்யாவின் சூப்பர் ஹிட் படத்தை உதறித்தள்ளிய விஜய்.. உண்மையை உடைத்த லைலா.!