மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சூர்யாவின் சூப்பர் ஹிட் படத்தை உதறித்தள்ளிய விஜய்.. உண்மையை உடைத்த லைலா.!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் தளபதி விஜய். சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். என்ன திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.
இதனையடுத்து இன்று தளபதி 68 திரைப்படத்தின் பூஜை மற்றும் படத்தில் நடிக்கும் நடிகை மற்றும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படத்தில் லைலா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சிநேகா உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் விஜய்யுடன் நடிப்பது குறித்து நடிகை லைலா பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது, உன்னை நினைத்து படத்தில் முதலில் விஜய் தான் நடிப்பதாக இருந்தது அப்போது விஜய் சில காட்சிகளில் நடித்து முடித்திருந்தார் ஆனால் விஜய்க்கு அந்த கதையில் உடன்பாடு இல்லாததால் அந்த படத்தில் சூர்யா நடித்திருந்தார். தற்போது 21 ஆண்டுகளுக்குப் பிறகு தளபதி 68 படத்தில் விஜயுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.