பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ரஜினிகாந்தின் பாபா படம் தான் என் கேரியரின் முற்றுபுள்ளியாக அமையும் என்று எதிர்பார்க்கவில்லை.. மனிசா கொய்ராலாவின் பரிதாபமான நிலைமை!?
இந்திய நடிகையான மனிசா கொய்ராலா தமிழ், ஹிந்தி, நேபாளம் போன்ற மொழிகளில் படங்கள் நடித்திருக்கிறார். இவர் தமிழில் பாம்பே, இந்தியன், ஆளவந்தான், ஒரு மெல்லிய கோடு, முதல்வன், மாப்பிள்ளை பாபா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இதன்படி, மனிசா கொய்ராலா இறுதியாக நடித்த பாபா திரைப்படம் மிகபெரிய தோல்வி படமாக அமைந்தது. இப்படத்தில் ரஜினிகாந்த், மனிசா கொய்ராலா, கவுண்டமணி, நம்பியார், போன்றோர் நடித்த இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
பாபா படத்தை குறித்து ஒரு பேட்டியில் மனிசாவிடம் கேட்டபோது, "சூப்பர்ஸ்டார்க்கு கதாநாயகியாக நடித்த பாபா திரைப்படம் தான் என்னுடைய கடைசி படமா இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. பாபா படம் மிகப்பெரும் தோல்வி படமாக அமைந்ததால் இப்படத்திற்கு பிறகு எனக்கு படவாய்ப்புகள் எதுவும் வரவில்லை" என்று மனவருத்ததுடன் கூறியிருந்தார்.
மேலும், கடந்த வருடம் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு தியேட்டர்களில் பாபா திரைப்படம் ரீ-ரிலிஸ் செய்யப்பட்டது. அப்போது வசூல்ரீதியாக வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.