மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட கொடுமையே... லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கா இந்த நிலைமை !!! படவாய்ப்பிற்காக என்னலாம் பண்ணுறாங்க.!?
தமிழ் திரையுலகின் முண்ணனி நடிகையான நயன்தாரா பல வருடங்களாக தொடர்ந்து வெற்றி படங்களை கோலிவுட் திரையுலகிற்கு அளித்து ' லேடி சூப்பர் ஸ்டார் ' என்ற பெயரை பெற்றிருக்கிறார். பல சர்ச்சைகளில் இவர் சிக்கியிருந்தாலும் அதிலிருந்து வெளிவந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற பெயரை தக்கவைத்துக்கொண்டார்.
கடந்த ஆண்டு நயன்தாராவிற்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனிற்கும் கோலகலமாக திருமணம் நடைபெற்றது. இதில் பல முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இதன் பிறகு வெளி நாடுகளுக்கு தேன் நிலவிற்கு சென்ற புகைபடங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இப்புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணமானதிலிருந்தே தொடர்ந்து பிரச்சினைகளை சந்தித்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. இதன்படி, திருமணமாகி சில மாதங்களிலேயே இரு ஆண் குழந்தைகளுக்கு வாடகைதாய் முறை மூலம் தாயான நயன்தாரா மீண்டும் சர்ச்சையில் சிக்கி சமூக வலைத்தளங்களில் பேசு பொருளானார்.
இந்த பிரச்சினைகளில் இருந்து வெளிவந்ததும் இவர் கைவசம் வைத்திருந்த படங்களில் முன்பணம் பெற்று நடித்து தராததால் முன்பணத்தை தயாரிப்பாளர்கள் திரும்ப பெற்று கொண்டனர்.
இதுபோன்ற நிலையில், வேறு படம் எதும் கைவசம் இல்லாத காரணத்தினால் தற்போது லோகேஷ் இயக்கத்தில் ராகவா லாரன்சுடன் நடிக்க சம்மதித்துள்ளார். எப்போதும் அழுத்தமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்கும் நயன்தாரா வேறு வழியின்றி இப்படத்தில் நடிக்க ஒப்புகொண்டாரா என கோலிவுட் வட்டாரத்தில் பேசிவருகின்றனர்.