திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நயன்தாரா செய்த செயல்...மாணவர்களிடையே ஆரவாரம்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரது திருமணம் கடந்த ஆண்டு விக்னேஷ் சிவனுடன் பல திரை உலக நட்சத்திரங்களின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இதன் பிறகு இரண்டு ஆண் குழந்தைகளுக்கு வாடகை தாய் முறை மூலம் தாயாகினார் நடிகை நயன்தாரா.
பல காலமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்த நடிகை நயன்தாரா திருமணத்திற்கு பிறகு சென்னையில் உள்ள சத்தியபாமா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவருடன் பிரபல நடிகர் ராணாவும் பங்கு பெற்றார்.
இந்நிலையில் மாணவர்களுக்கு மத்தியில் நயன்தாரா சிறப்புரை வழங்கினார். நயன்தாராவை பார்த்து கல்லூரி மாணவர்கள் ஆரவாரத்தில் குதித்தனர். மாணவர்கள் மத்தியில் பேசிய நயன்தாரா "நீங்கள் இந்த ஆண்டு எடுக்கும் முடிவுகள் அனைத்தும் உங்களது எதிர்காலத்தை முன்னிறுத்தி எடுக்க வேண்டும்.அவ்வாறு எடுக்கும் முடிவுகள் உங்கள் எதிர்காலத்தை இன்னும் அழகாக மாற்றும்.
இந்த நேரத்தில் நீங்கள் நல்லவர்களோடு இருப்பது கெட்டவர்களோடு இருப்பது உங்கள் எதிர்காலத்தை மாற்றும் என்றார்.கல்லூரியை விட்டு வெளியே செல்லும்போது நீங்கள் திறமையான நபராகவும், வெற்றி அடைந்த நபராகவும் மாறினாலும் பணிபுரிந்தால் வாழ்க்கைக்கு நல்லது என்று கூறினார்.
உங்கள் பெற்றோருக்கும் முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.உலகத்தில் மற்றவர்களால் மிகவும் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படுவோம். ஆனால் இந்த கல்லூரி காலங்களில் வாழ்க்கையை மிகவும் அழகாக மாற்றிக் கொள்ள வேண்டும் இவ்வாறாக அவர் உரை நிகழ்த்தினர்.