மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீங்க இல்லாம எப்படி??.. தனுஷின் கோரிக்கையை ஏற்று நித்யா மேனன் செய்த நெகிழ்ச்சி செயல்..!
கோலிவுட்டில் 180 என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நித்யா மேனன். இவர் அதன் பின் தமிழில் கலக்கலான பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் நித்யா படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து, கால் எலும்பை முறித்துக் கொண்டார்.
இவர் இதற்கு முன்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற தெலுங்கு படவிழாவிற்கு வீல் சேரில் சென்றிருந்தார். தற்போது கால் எலும்பு முறிந்ததால் மீண்டும் இவர் தனுஷ் பட விழாவிற்கும் வீல் சேரில் வந்துள்ளார்.
பொதுவாகவே நடிகர் மற்றும் நடிகைகள் கை அல்லது கைகளில் ஏதேனும் காயம் ஏற்பட்டால் கூட பட விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்த்துவரும் நிலையில், நடிகை நித்யா மேனன் படவிழாவிற்கு வந்துள்ளது பாராட்டுகளை பெற்றுள்ளது.
இந்த விஷயம் குறித்து நித்யா மேனன் கூறுகையில், "நீங்கள் இல்லாம எப்படி?. வீல் சேரிலாவது கட்டாயம் நீங்கள் வரவேண்டுமென தனுஷ் கேட்டுக்கொண்டார். அதன் பெயரில் நான் இந்த விழாவிற்கு வந்துள்ளேன்" என்று தெரிவித்தார்.