திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகை யார் தெரியுதா பாருங்க? அட! அவரா இது?
இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை கர்நாடக மாநிலம் பெங்களூருவை பூர்விகமாக கொண்டவர். ஆங்கில திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் அதன்பிறகு கன்னட திரைப்படம் மூலம் கதாநாயகியாக அவதாரம் எடுத்தார்.
கன்னட படங்களை தொடர்ந்து தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான 180 என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான இவர் வெப்பம், காஞ்சனா 2 , மெர்சல் என தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் நடித்தார்.
தற்போது முன்னாள் தமிழக முதல்வரும், நடிகையுமான செல்வி. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெயலலிதாவாக நடித்துவருகிறார். இவர் யார் என்று தெரிகிறதா? வேறு யாரும் இல்லை, நடிகை நித்யா மேனன் தான் இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை.