ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
தனது காதலரை கரம்பிடித்த பிரபல 'நாயகி' சீரியல் நடிகை! மாப்பிள்ளை யார் தெரியுமா? வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம்!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட்டான நாயகி தொடரில் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை பாப்ரி கோஷ்டி . இவர் பாண்டவர் இல்லம் என்ற தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் பூவே உனக்காக மகராசி, சித்தி 2 சீரியலிலும் நடித்துள்ளார்.
அதுமட்டுமின்றி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமான நடிகை பாப்ரி கோஷ் விஜய் நடிப்பில் வெளிவந்த பைரவா மற்றும் சர்கார் படத்திலும், சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா படத்திலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி அஜீத் நடிப்பில் வெளிவந்த விசுவாசம் படத்தில் நயன்தாராவிற்கு தோழியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் பாப்ரி கோஷ் தொழில் அதிபர் ஒருவரை காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. மிகவும் எளிமையாக நடந்த இவர்களது திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சில திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் பாப்ரி கோஷின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.