மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நான் தற்கொலை செய்துகொண்டால் அவர்கள்தான் காரணம்.!பகீர் கிளப்பிய பிரபல நடிகையின் கடிதம்!!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த நடிகை பாயல் கோஷ் தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் தமிழ் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் மிஸ்டர் ராஸ்கல், ஊசரவெள்ளி போன்ற படங்களிலும் ஹிந்தியில் படேல் கி பஞ்சாபி ஷாதி, பிராயணம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் நடிகை பாயல் கோஷ் தமிழில் தேரோடும் வீதியிலே என்ற படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் அரசியல்வாதியாகவும் பிஸியாக இருந்து வருகிறார். இவர் இதற்கு முன்னர் பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு அனுராக் மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் பாயல்
"நான் தற்கொலை செய்து கொண்டாலோ, மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தாலோ அதற்கு இவர்கள்தான் காரணம்" என எழுதிய கடிதம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். ஆனால் அதில் அவர் யார் பெயரையும் குறிப்பிடவில்லை. இதனை கண்ட நெட்டிசன்கள் உங்கள் நெருங்கிய நண்பர்களிடம் மனம் விட்டு பேசுங்கள், மருத்துவரை பாருங்கள் என கமெண்ட் செய்திருந்தனர்.