திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சூர்யா 44 படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்.! அட.. யார்னு பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். சூர்யா 44 வது படமான இதனை கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சூர்யா இருவரும் இணைந்து தயாரிக்கவுள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த ஜுன் மாதம் 17ஆம் தேதி துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
சூர்யா 44-ல் இணையும் பிரபலங்கள்
இந்த நிலையில் சூர்யா 44 படத்தில் இணையும் பிரபலங்கள் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அதாவது சூர்யா 44 படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக கூறப்பட்டது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: Surya 44 Update: நடிகர் சூர்யாவுடன் இணைந்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
கைகோர்க்கும் பிரபல மலையாள நடிகர்
இந்த நிலையில் சூர்யா 44 படத்தில் பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏராளமான மலையாள திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர். தமிழில் இதற்கு முன்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த ஜகமே தந்திரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் ஜோஜு ஜார்ஜ் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகிவரும் தக் லைஃப் படத்திலும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: "மொய்தீன் பாயாக வாழ்ந்த தலைவர்.." பிரபல இயக்குனரின் பாராட்டு..!! குஷியில் லால் சலாம் பட குழு.!