மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட இந்த நடிகரை தான் பிரியா பவானி சங்கருக்கு மிகவும் பிடிக்குமாம்... யார் அவர் தெரியுமா.?
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் மேயாதமான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். அதனைத் தொடர்ந்து பிரியா பவானி ஷங்கர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, ஓமணப் பெண்ணே போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான யானை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இவரது கைவசம் தற்போது ஹாஸ்டல், பொம்மை பத்து தல,ருத்ரன், இந்தியன்-2, குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம், யானை, உள்ளிட்ட எக்கச்சக்கமான படங்கள் உள்ளன.
இந்நிலையில், சமீபத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அதில் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் மாதவன் என கூறியுள்ளார்.