திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ரெட் ரெட் ரெட்... படுக்கை அறையில் சும்மா தாறுமாறாக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்... வைரல் புகைப்படம்!!
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கி,சீரியலில் நாயகியாக நடித்து பின் மேயாதமான் என்ற படத்தின் மூலம் வெள்ளிதிரையில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். இவரின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து கார்த்தி, தனுஷ், அருண் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல சூப்பர் ஹூட் படங்களில் நடித்துள்ளார். தற்போது பத்து தல, ருத்திரன், இந்தியன் 2, பொம்மை, டிமான்டி காலனி 2 போன்ற படங்களில் நடித்துள்ளார். இப்படங்களின் வருகைக்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இவ்வாறு பிரபல நடிகையாக வலம் வரும் பிரியா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அவ்வப்போது தனது போட்டோ சூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது படுக்கை அறையில் ரெட் கலர் உடையில் சும்மா தாறுமாறாக போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.