மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"படத்தில் இருக்கும் இந்தக் குழந்தை யார் என்று தெரிகிறதா?" "பிரபல வாரிசு நடிகையா இவர்!"
90களில் தமிழ் சினிமாவில் முக்கிய முன்னணி நடிகையாக இருந்தவர் ராதா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார். இவரது சகோதரி அம்பிகாவும் 80-90களில் முன்னணி நடிகையாக இருந்தவர்
1981ம் ஆண்டு பாரதிராஜாவின் "அலைகள் ஓய்வதில்லை" படத்தில் தான் ராதா அறிமுகமானார். மேலும் "முதல் மரியாதை" படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றுள்ளார் ராதா. இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.
மூத்தவரான கார்த்திகா தமிழில் "கோ" படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகமானார். மேலும் சில தென்னிந்திய படங்களில் நடித்துள்ள கார்த்திகாவுக்கு பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. 2015ம் ஆண்டு "புறம்போக்கு என்கின்ற பொதுவுடைமை" படத்தில் தான் கடைசியாக நடித்திருந்தார் கார்த்திகா.
இந்நிலையில் கடந்த மாதம் 19ம் தேதி இவருக்கும், ரோஹித் மேனன் என்பவருக்கும் திருவனந்தபுரத்தில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது கார்த்திகாவின் குழந்தைப் பருவப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.