"கோழைகளே... கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.." ஜிபியு விமர்சனம்.!! நடிகை திரிஷா பதிலடி.!!
தமிழ் சினிமாவின் பிரபலமான முன்னணி நடிகைக்கு கொரோனா பாதிப்பு.. பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்..

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். யுவன், தடையற தாக்க படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் பின்னர் கெளதம் கார்த்தி நடிப்பில் வெளிவந்த என்னமோ ஏதோ, கார்த்தி நடிப்பில் வெளிவந்த தீரன் ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
தற்போது தமிழ், தெலுங்கு என முன்னணி நாயகியாக வலம்வந்துகொண்டிருக்கும் இவர் தமிழ் சினிமாவில் அடுத்ததாக அயலான், இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ரகுல்.
தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் ரகுல். மேலும் தான் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் படப்பிடிப்புகளில் கலந்துகொள்வேன் எனவும், என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.