#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இந்த நபரை பார்த்தே ஆகணும்., எனக்கு ஹெல்ப் பண்ணுங்க - ரசிகர்களிடம் கெஞ்சும் ராஷ்மிகா மந்தனா..! யார் அந்த நபர்?.! நீங்கள் பாருங்க..!!
இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. இப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடித்துவரும் வாரிசு படத்தின் சூட்டிங் ஹைதராபாத் மற்றும் சென்னையில் நடந்து வரும் நிலையில், ஷூட்டிங் இல்லாத சமயங்களில் ராஷ்மிகா மும்பையில் தங்கியிருப்பார்.
இவர் அடுத்ததாக ஹிந்தி படங்களில் நடிக்க இருப்பதால், தனது வீட்டை மும்பைக்கு மாற்றியுள்ளார். அத்துடன் சமீபத்தில் தளபதி விஜய்யுடன் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகியது. இதனைத்தொடர்ந்து நடிகை ராஷ்மிகா தேடும் நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு வெளியான புஷ்பா படத்தின் 'வாயா சாமி' பாடல் மிகப்பெரிய ஹிட்டடித்து இருந்தது. இந்த பாடலுக்கு பலரும் நடனமாடி தங்களின் வீடியோவை பதிவு செய்து வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் இப்பாடலுக்கு பள்ளிசிறுமி ஒருவர் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை கண்ட ராஷ்மிகா மந்தனா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை பகிர்ந்து, "கியூட் சிறுமியை நான் நேரில் பார்க்க விரும்புகிறேன். எனக்கு யாராவது ஹெல்ப் பண்ணுங்க" என்று கூறி இருக்கிறார். ராஷ்மிகாவின் இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருவதை தொடர்ந்து, விரைவில் சிறுமியை நேரில் சந்திக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Maaaaadddddeeeeee myyyyy daaaaaay.. I want to meet this cutie..💘
— Rashmika Mandanna (@iamRashmika) September 14, 2022
how can I? 🥹 https://t.co/RxJXWzPlsK