மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அந்த வார்த்தையால் கூப்பிடும் விஷால்.. அம்பலப்படுத்திய நடிகை!
புரட்சி தளபதி விஷால்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவர் நடிகராக மட்டுமில்லாமல், தனது ரசிகர் மன்றத்தின் மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இதனிடையே இவர் மனதில் பட்டதை வெளிப்படையாக கூறும் சில கருத்துக்கள் சர்ச்சையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் அவதாரம் எடுக்கும் விஷால்
நடிகர் விஷாலின் நடிப்பில் கடைசியாக வெளியான ரத்னம் திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், விஷால் நடித்து பாதியில் கைவிடப்பட்ட துப்பறிவாளன் 2 திரைப்படத்தை விஷால் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காபி கேட் இயக்குனரை கைவிட்ட பாலிவுட்.?! கோலிவுட்டுக்கே திரும்பிய சோகம்.!
நடிகையை பரதேசி என அழைக்கும் விஷால்
இந்த நிலையில் பிரபல நடிகை ரவீனா சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகர் விஷால் குறித்து பரபரப்பு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில், 'விஷால் என்னை பரதேசி என்று தான் எப்போதும் அழைக்கிறார். ஆனால், ஏன் அவ்வாறு அழைக்கின்றார் என எனக்கு சத்தியமாக தெரியாது' என கூறியுள்ளார்.