#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வேற லெவல்! அவரோட படத்தில் நடிச்சது பெருமையான அனுபவம்! செம ஹேப்பியில் நடிகை ரித்விகா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 ல் கலந்து கொண்டு நிகழ்ச்சியின் வெற்றியாளரானவர் நடிகை ரித்விகா.அவர் தற்போது Netflix நிறுவனத்தின் தமிழ் ஆந்தாலஜி படமான ‘நவரசா’வில் நடித்து வருகிறார். நவரசா கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி, ஆச்சர்யம் என மனித உணர்வுகளான நவரசங்களை மையமாகக் கொண்டு ஒன்பது அற்புத கதைகளாக உருவாகி வருகிறது.
இதில் ஒரு பகுதியான கோபத்தின் உணர்ச்சியை மையமாகக்கொண்டு உருவாகிவரும் ரௌத்திரம் என்ற கதையில் அன்புக்கரசி என்ற வேடத்தில் நடிகை ரித்விகா நடித்துள்ளார். இதனை நடிகர் அரவிந்த் சாமி இயக்கியுள்ளார். இந்த நிலையில் நடிகர் அரவிந்த்சாமியுடன் பணிபுரிந்த அனுபவங்களைக் குறித்து மிகவும் பெருமையாக ரித்விகா அண்மையில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அதில் அவர், இது என் வாழ்க்கையில் மிக பெருமையான தருணம். நடிகராக இல்லாமல் ஒரு இயக்குநராக அவரை அருகில் இருந்து பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சினிமா குறித்த அவரது நுணுக்கமான அறிவும், திரைப்படத்தை உருவாக்குவதில் அவர் பயன்படுத்திய முறையும் அபாரமானது. இப்படத்திற்காக காட்சிகள் மற்றும் டயலாக் ரிகர்சல் செய்யும் ஆன்லைன் கூட்டங்களில் கலந்து கொண்டது அற்புதமான அனுபவம் என்று கூறியுள்ளார்.