மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எனக்கு பிடிக்கவே இல்லை.. அந்த காட்சியில் நடித்ததால் நான் அழுதேன்.! நடிகை சதா வருத்தம்!!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஜெயம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை சதா. தொடர்ந்து அவர் தமிழில் அந்நியன், பிரியசகி, திருப்பதி,உன்னாலே உன்னாலே உள்ளிட்ட பல படங்களில் நடித்து இளைஞர்களின் பேவரைட் ஹீரோயினாக வலம் வந்தார்.
தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்த அவர் சில காலங்கள் சினிமாவிற்கு இடைவெளி விட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். இந்நிலையில் அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனக்கு சினிமாவில் நேர்ந்த அனுபவங்களை குறித்து பகிர்ந்துள்ளார்.
நடிகை சதா தெலுங்கில் தேஜா இயக்கத்தில் உருவான ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் சதாவின் கன்னத்தில் வில்லனாக நடித்த கோபிசந்த் நாக்கால் நக்குவது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். அந்த காட்சியில் நான் நடிக்க மாட்டேன் என சதா இயக்குனரிடம் கூறியதாகவும், ஆனால் அவர் படத்திற்கு இந்த காட்சி மிக முக்கியம் எனக் கூறி நடிக்க வைத்ததாகவும் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த காட்சியை எடுத்த பிறகு வீட்டிற்கு சென்று நடிகை சதா நீண்ட நேரம் தான் அழுததாகவும் தற்போது கூட டிவியில் அந்த காட்சி வந்தால் தான் பார்க்க மாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.