சமந்தா செய்த செயல்.. மூடநம்பிக்கையின் உச்சம்.. திட்டித்தீர்க்கும் விமர்சகர்கள்.!



actress-samantha-crying-in-pazhani-kovil

சமந்தா தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக இருப்பவர். ஏ மாயா சேஷவா என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமானார்.முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை பெற்று தென்னிந்திய சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை கைப்பற்றினார்.

samantha
தமிழில் பானா காத்தாடி படத்தில் கதாநாயகியாக நடித்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வெற்றி பெற்று முன்னணி நடிகையாக தனது இடத்தை நிலைநாட்டினார்.
இத்தகைய நிலையில் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகனான நாகசைத்தன்யாவை காதலித்து வந்தார்.

மேலும் இவர்களுக்கு 2017 ஆம் வருடம் அக்டோபர் 6 ஆம் தேதியன்று கோவாவில் கிறிஸ்தவ மற்றும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. அதன் பின்பு கருத்து வேறுபாடு காரணமாக நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

samantha
இத்தகைய நிலையில் கணவரைப் பிரிந்து தனியாக வாழும் சமந்தாவிற்கு மயோசிடிஸ் நோய் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். படப்பிடிப்பில் இருந்து சிறிது காலம் இடைவேளை எடுத்துக்கொண்டார். நோயின் தீவிரம் சற்று குறைவான நிலையில் இவர் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளிவந்தது. அதன் பின்பு இவர் பழனி கோவிலில் பிரபல இயக்குனர் உடன் 600 படிகள் நடந்தே சென்று அழுது கொண்டே சாமியை தரிசனம் செய்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடையே தீயாய் பரவியுள்ளது. மேலும், சிலர் இது மூட நம்பிக்கை என்றும், ஒரு நடிகையே இப்படி இருப்பது தவறான எடுத்துக்காட்டு என்றும் விமர்சித்து வருகின்றனர்.