#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஜயை கன்னத்தில் அறைந்த அஜித் பட நடிகை.. திட்டி தீர்க்கும் விஜய் ரசிகர்கள்.?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் இளைய தளபதி விஜய். இவர் ஆரம்ப காலகட்டத்தில் தன் தந்தையின் மூலம் சினிமாவில் காலடியெடுத்து வைத்தாலும் தற்போது தனது நடிப்பு திறமையின் மூலம் படிப்படியாக முன்னேறியுள்ளார்.
இதுபோன்ற நிலையில், 1984 ஆம் வருடம் நடிகை சங்கவி மற்றும் விஜய் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைபடம் 'ரசிகன்'. இப்படம் அந்த காலகட்டத்தில் வெற்றி படமாக விஜய்க்கு அமைந்தது. மேலும் நடிகை சங்கவிக்கு அறிமுக படம் அஜித் நடிப்பில் வெளியான 'அமராவதி'
இதனையடுத்து தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிரபலமான நிகழ்ச்சியில் நடிகை சங்கவி கலந்து கொண்டார். அதில் விஜய் குறித்து பல சுவாரசியமான நிகழ்வுகளை பேசியிருந்தார்.
அவர் கூறியதாவது, "ரசிகன் திரைப்படத்தில் நடிக்கும் போது நான் விஜய்யை கன்னத்தில் அறைவது போல் காட்சி இருக்கும். அந்த காட்சியில் பயந்து போய் வேகமாக அடித்து விட்டேன். விஜய்க்கு கொஞ்ச நேரத்துக்கு காது கேக்கவே இல்ல. எனக்கு கஷ்டமா இருந்தது" என்று கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி விஜய் ரசிகர்கள் நடிகை சங்கவியை திட்டி வருகின்றனர்.