"வெவ்வேறு மதத்தில் திருமணம்., டெய்லி ஒரே டார்ச்சர்" - தமிழ் சீரியல் நடிகை ஓபன்டாக்.!!



Actress shabana open speech about her marriage

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த செம்பருத்தி தொடர் மூலம் பிரபலமடைந்த நடிகை ஷபானா. இவர் ஆரியன் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். 

இருவரும் வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் தரப்பில் கடுமையான எதிர்ப்பு இருந்தது. இருப்பினும் பெற்றோரை எதிர்த்து தனது காதலர் ஆரியனை ஷபானா கரம் பிடித்தார். 

cinema news

இந்நிலையில் தனது திருமண வாழ்க்கை குறித்து நடிகை பேசுகையில், "நான் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர் என்பதால் எனது குடும்பத்தினர் எங்களது காதல் மற்றும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. 

எனக்கு தினமும் போன் செய்து ஏதேனும் ஒரு பிரச்சனையை பேசி தொந்தரவு செய்து வந்தார்கள்" என்று கூறியுள்ளார்.