பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
"அந்த ஹீரோ கூட எல்லாம் நடிக்க முடியாது எனக்கு பயமா இருக்குது" என்று கூறிய சில்க் ஸ்மிதா.! யார் அந்த நடிகர்.?
தமிழ் சினிமாவில் 80களின் ஆரம்ப காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் சில்க் ஸ்மிதா. தனது கவர்ச்சியான கண்ணாலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.
இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து பல மொழி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
ஒரு காலத்தில் சில்க் ஸ்மிதா தங்கள் படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காகவே தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் போட்டி போட்டுக் கொண்டு கால்ஷீட் வாங்குவார்களாம். எப்போதும் சினிமாவில் பிசியாகவே இருந்த சில்க் ஸ்மிதா, திடீரென்று தற்கொலை செய்து கொண்ட செய்தி திரைத்துறையினருக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது போன்ற நிலையில் சத்யராஜ், சில்க் ஸ்மிதாவுடன் இணைந்து நடிக்க ஆசைப்பட்டாராம். ஆனால் நடிகை சில்க் ஸ்மிதா அவரது உயரத்தையும், மூஞ்சியையும் பாருங்க. எனக்கு நடிக்க பயமா இருக்குது என்னால முடியாது என்று கூறினாராம். தயாரிப்பாளர்கள் அவரிடம் கெஞ்சி நடிக்க சம்பந்தம் வாங்கினார்களாம். இதன் பிறகு சத்யராஜின் குணத்தை புரிந்து கொண்டு சில்க் ஸ்மிதா அவருடன் இணைந்து நடித்தார் என்றசெய்தி கோலிவுட் வட்டாரத்தில் பரவி வருகிறது.