மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிம்ரனின் மகனா இவர்.. பாலிவுட் ஹீரோ மாதிரியே இருக்கிறாரே.? இணையத்தில் வேகமாக பரவும் புகைப்படம்..
தமிழ் சினிமாவில் 90களின் ஆரம்ப கால முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் சிம்ரன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.
தனது நடிப்பு திறமையின் மூலம் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வந்த சிம்ரன், இன்றுவரை மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். திருமணத்திற்கு பின்பு நடிப்பில் இருந்து விலகி சிம்ரன் தற்போது மீண்டும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
சினிமாவில் மட்டுமல்லாது சின்னத்திரையிலும் கவனம் செலுத்தி வரும் சிம்ரன் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி சமூக வலைத்தளங்களில் தனது குடும்ப புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் சிம்ரன்.
இது போன்ற நிலையில் சமீபத்தில் இவர் பகிர்ந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படத்தில் சிம்ரனின் மகனும் இருந்தார். அவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிம்ரனிற்கு இவ்வளவு பெரிய மகனா? பாலிவுட் நட்சத்திரம் போலவே இருக்கிறாரே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.