தனுஷ் பட பிரபல நடிகைக்கு குழந்தை பிறந்தாச்சு.! என்ன குழந்தை தெரியுமா?? குவியும் வாழ்த்துக்கள்!!



Actress sonam kapoor blessed with boy baby

கடந்த 2007 ஆம் ஆண்டு சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளிவந்த 'சாவரியா' என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சோனம் கபூர். அதனை தொடர்ந்து பல முன்னணி பாலிவுட் ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். சோனம் கபூர் பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகள் ஆவார். 

அவர் தமிழில் வெளிவந்து செம ஹிட்டான அம்பிகாபதி என்ற படத்தில் நடிகர் தனுஷ்ஷுடன் இணைந்து நடித்துள்ளார். சோனம் கபூர் கடந்த 2018 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான தொழிலதிபர் ஆனந்த் அகுஜாவை, திருமணம் செய்து கொண்டார். பின்னரும் சில பாலிவுட் படங்களில் நடித்து வந்த அவர் கடந்த மார்ச் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.

sonam kapoor

இந்நிலையில் தற்போது அந்த ஜோடிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை சோனம் கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.