மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மன்சூர் அலிகான் சர்ச்சை கருத்து: நடிகை திரிஷாவின் அதிரடி முடிவு... ஏன், என்ன காரணம் தெரியுமா.?
சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் மன்சூர் அலிகான் திரிஷா குறித்து பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு திரைப்பிரபலங்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் நடிகை திரிஷாவும், இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அவர் மனிதக் குலத்துக்கே அவப்பெயரை ஏற்படுத்துகிறார் என கண்டனம் தெரிவித்திருந்தார்.
மேலும் மன்சூர் அலிகான், நான் தவறாக எதுவும் பேசவில்லை என மன்னிப்பு கேட்க மறுத்தார். இந்த நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து டிஜிபிக்கு பரிந்துரை செய்தது. மேலும் ஆயிரம் விளக்கு மகளிர் காவல்துறையினர் நடிகர் மன்சூர் அலிகான் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.
இந்நிலையில் மன்சூர் அலிகான் இன்ஸ்டாக்ராமில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டிருந்தார். இதன் காரணமாக போலீஸ் அனுப்பிய கடிதத்தின் பதில் கடிதத்தில் திரிஷா மன்சூர் மன்னிப்பு கேட்டு விட்டதால் அவர் மீது நடவடிக்கை ஏதும் எடுக்க வேண்டாம் என கூறியுள்ளாராம். திரிஷாவின் இந்த முடிவிற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.